தஞ்சாவூரை அடுத்துள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு, வியாழக்கிழமை யொட்டி வெள்ளி கவசம் மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து குரு பகவானை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு பிப்ரவரி 19, 2026 அன்று நடைபெற்றது.