திருவையாறு: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கீழபுனவாசல் கணேசா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில், மழைநீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உசிலம்பட்டி வேளாண்மைக் கல்லூரி 4 ஆம் ஆண்டு மாணவிகள், கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் இப்பேரணியை ஒருங்கிணைத்தனர். "மழைநீரைச் சேமிப்போம், பூமியைப் பாதுகாப்போம்" என்ற முழக்கங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரி மாணவிகள் குழுவினர் மழைநீர் சேமிப்பு முறைகள் குறித்து விளக்கினர்.

தொடர்புடைய செய்தி