தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார். திருவையாறு அருகே காருகுடியைச் சேர்ந்தவர் கே. மதி (54), விவசாயி. இவர் வியாழக்கிழமை விளாங்குடிக்குச் சென்றுவிட்டு, சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். கஸ்தூரிபாய் நகர் அருகே வந்த இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால், பலத்த காயமடைந்த மதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.