திருவையாறு வாழை இலை அறுவடை பணி முடக்கம்

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரம் ஏக்கரில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வாழைத்தார்கள் அனுப்பப்படுகின்றன. மேலும், ஒரு நாளைக்கு 25 லட்சம் வாழை இலைகள் அறுவடை செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த காற்றாலும், மழையாலும் வாழை இலைகள் சேதமடைந்தன. தொழிலாளர்கள் மற்றும் வாகனங்கள் பற்றாக்குறையால் அறுவடை பணிகள் முடங்கின. தற்போது வெயில் தலைகாட்ட தொடங்கியுள்ள நிலையில், வாழையிலை அறுவடைப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழையிலை ஏடு ஒன்று ரூ. 2 முதல் 3 வரையும், நுனி இலை ரூ. 3 முதல் 5 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த நாட்களில் இதன் விலை சற்று உயரும்.

தொடர்புடைய செய்தி