திருக்காட்டுப்பள்ளி மற்றும் பிற இடங்களில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை, அடையாளம் தெரியாத நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வருவதாக கூறி, பெற்றோரை தொடர்பு கொள்ள கூறியுள்ளனர். பெற்றோர்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டால், ஜிபே எண் கேட்டு, வாட்ஸ்அப் கால் மூலம் பணத்தை நூதனமாக திருடிவிடுவதாக கூறப்படுகிறது. அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இந்த மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.