திருவையாறு அருகே கல்லணை பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கடம்பன்குடியைச் சேர்ந்த இளங்கோவன் (47) என்பவரைப் பிடித்து சோதனை செய்தார். அவரிடமிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.