திருக்காட்டுப்பள்ளி ஆண்டி தெருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா (24) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை காலை அங்கன்வாடிக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது கணவர் ஐயப்பன் அளித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் அகிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.