தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி - பூதலூர் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த மருதையன் (59) என்பவர் பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் சார்பு-ஆய்வாளர் சூர்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.