பூதலூர் அருகே கோட்டாரப்பட்டி தெற்குத்தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆனந்தராஜ், அவரது தந்தை ரெங்கராஜ் மற்றும் மகன் தேவதஷ்வந்த் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் ரெங்கராஜ் (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்தராஜ் மற்றும் தேவதஷ்வந்த் சிறுகாயங்களுடன் தப்பினர். இதுகுறித்து பூதலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.