தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலத்தில், எதிரில் வந்த பைக் மோதி மாற்றுத்திறனாளி சாமுவேல் (48) பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு தனது மூன்று சக்கர வாகனத்தில் திருக்காட்டுப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் சார்பு ஆய்வாளர் சூர்யா விசாரணை நடத்தி வருகிறார்.