திருக்காட்டுப்பள்ளி அருகே, தேர்தல் முடிவுகளால் ஆத்திரமடைந்த கும்பல், தவெக கட்சி முன்னிலை பெற்றதைக் கொண்டாடும் வகையில் வெடி வெடித்த ஸ்ரீஹரி என்பவரை சண்முகம் என்பவர் அரிவாளால் வெட்டியதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மூவர் தாக்கியதில் காயமடைந்த ஸ்ரீஹரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.