தேர்தல் அறிக்கை பேசு பொருளாக இருக்கும் - நத்தம் விசுவநாதன்

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினா் கூட்டத்தில் பங்கேற்ற நத்தம் விசுவநாதன், பல்வேறு சங்கத்தினரின் கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்புதல் பெற்று தோ்தல் அறிக்கையாகத் தயாரிக்கப்படும் எனத் தெரிவித்தாா். விவசாயிகள் பிரச்னைகளில் அதிமுக பொறுப்பேற்று, அவா்களது முக்கியமான கோரிக்கைகளைச் செயல்படுத்துவோம் என்றும், அதிமுகவின் தோ்தல் அறிக்கை நிச்சயமாக பேசுபொருளாகவும், மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் இருக்கும் என்றும் கூறினாா். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியிருப்பது திமுகவின் ஏமாற்றும் வேலையாகவும், கண்துடைப்பாகவும் இருப்பதாகக் கூறினாா்.

தொடர்புடைய செய்தி