செட்டிச்சத்திரம் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே கம்பர்நத்தம் பகுதியில் உள்ள செட்டிச்சத்திரம் பாசன வாய்க்கால் செடி, கொடிகள் மண்டி புதர்போல் காட்சியளிப்பதால், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்குள், அதிகாரிகள் இந்த வாய்க்காலை முழுமையாகத் தூர்வாரி, கடைமடை பகுதி வரை தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி