சுவாமிமலை: ஆறுபடை வீடுகளுக்கு செல்லும் ஆன்மீக பக்தர்கள் வருகை

தமிழக அரசு அறிவித்ததன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள ஆறுபடையாக போற்றப்படும் முருகர் கோவில்களில் பக்தர்கள் சென்று வர அனைத்து வசதிகளையும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அது தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக நேற்று (டிசம்பர் 23) சுவாமிமலையில் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சாமிநாத சாமி திருக்கோவிலில் ஆறுபடை வீடுகளுக்கு அரசு சார்பில் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் 207 பக்தர்கள் வருகை தந்தனர். 

வருகை தந்து பக்தர்களை இந்து சமய அறநிலைத்துறை கோவில் துணை ஆணையர் உமாதேவி, மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள், வரவேற்று உணவு உபசரிப்பு வழங்கி சிறப்பு செய்தார்கள். வருகை தந்த பக்தர்கள் முன்னதாக சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் பங்கு பெற்று சாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி