தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (ஜன.4) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது விஜய் பேசுகையில், 2 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பிள்ளைகளின் மருத்துவம், பெறியியல் படிப்புக்கான கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்கும் என வாக்குறுதி அளித்துள்ளார்.