தஞ்சாவூர்: ஆறுகளில் சாக்கு மூட்டைகளில் மணல் திருட்டு

தஞ்சை மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் உள்ளிட்ட ஆறுகள் வறண்டு காணப்படுகின்றன. இதை பயன்படுத்தி திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் சாக்கு மூட்டைகள் மூலம் சட்டவிரோத மணல் திருட்டு நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இது குறித்து தனிப்படை அமைத்து, மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி