தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஏ. கே. எஸ். விஜயன் வீட்டின் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நவம்பா் 28 ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்ற விஜயன், டிசம்பா் 1 ஆம் தேதி வீடு திரும்பியபோது திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.