வேளாண் மாணவிகளின் மண் மாதிரி சேகரிப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், உசிலம்பட்டி வேளாண் கல்லூரி மாணவிகள், பூதலூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர். சேகரிக்கப்பட்ட மண்ணில் அமிலத்தன்மை, பேரூட்டச் சத்துக்கள் (தழை, மணி, சாம்பல் சத்து) மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் ஆய்வு செய்யப்படும். மண்ணின் தேவையை அறிந்து உரமிடுவதன் மூலம் விவசாயிகள் தேவையற்ற உரச் செலவைக் குறைக்கலாம் என்றும், பயிருக்கு ஏற்ற சரியான சத்துக்களை வழங்குவதன் மூலம் பயிர் வளர்ச்சியை மேம்படுத்தி அதிக மகசூல் பெற முடியும் என்றும் மாணவிகள் விளக்கினர்.

தொடர்புடைய செய்தி