தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் திருவள்ளுவர் நகரில் 250 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் குடியிருப்பு பகுதியிலேயே வழிந்தோடுகிறது. தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாயால் மழைநீருடன் கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் இந்த கழிவுநீர் வழியாகவே பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. பொதுமக்கள் சுகாதார சீர்கேடு குறித்து அச்சம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.