தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் எஸ்எஸ்பி காலனியை சேர்ந்தவர் காளிமுத்து மகன் வினோபா (51). இவர் பூதலூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தனது காரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடையில் டீ குடிக்க சென்றாராம். சற்று நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது காரின் முன் கண்ணாடியை உடைத்து, இடது முன்பக்கத்திலிருந்த கார் பெட்டகத்தை திறந்து அதிலிருந்த ரூ. 87 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து வினோபா பூதலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்த போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.