நாளை நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே சாலைகளைச் சீரமைக்கக் கோரியும், கூடுதல் பேருந்து வசதிகள் வேண்டியும் மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில், பழுதடைந்த சாலைகளைத் தற்காலிகமாகச் சீரமைக்கவும், மாணவர்களின் வசதிக்காகப் பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்கவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி