தஞ்சை: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சகாயராஜ் (65) தனது தோட்டத்தில் விஷம் கலந்த மதுவை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி