தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி வழியாக செல்லும் பேய்வாரி வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால், சக்கரசாமந்தம், களிமேடு உள்ளிட்ட பல கிராமங்களில் சம்பா, தாளடி சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாய்க்காலில் செடி, கொடிகள் மண்டி, குப்பைகள் கொட்டப்பட்டு மண் மேடிட்டுள்ளதால், சிறிய மழைக்கும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். வாய்க்காலை முழுமையாக தூர்வாரி, தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.