திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சேதமடைந்த சாலை பொதுமக்கள் அவதி

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி லயன்கரை சாலை, கண்டமங்கலம், செந்தலை, நடுக்காவேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளையும் தஞ்சாவூரையும் இணைக்கும் பிரதான சாலையாகும். ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்தச் சாலை, தற்போது குண்டும் குழியுமாக மாறி பயணிக்க முடியாத அவல நிலையில் உள்ளது. குழாய் பதிப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலை பராமரிப்பின்றி இருப்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி