திருவையாறு சாலையை சீரமைக்க கோரி மறியல், கிடைத்தது உடனடி பலன்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மிகப் பெரிய பள்ளத்தைச் சீரமைக்கக் கோரி இளைஞா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்பள்ளத்தால் வாகன ஓட்டுநா்கள் சிரமத்துக்கு ஆளாகினா். மேலும், சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்தாா், கல்லூரி மாணவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது. புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தியடைந்த இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேருந்து பயணிகள் கேட்டுக் கொண்டதால் சில நிமிடங்களில் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னா், நெடுஞ்சாலைத் துறையினா் பள்ளத்தைச் சீரமைத்தனா்.

தொடர்புடைய செய்தி