விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மூத்தோருக்கு பரிசு

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற 21-ஆவது மாநில அளவிலான மூத்தோா் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம், தஞ்சாவூா் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (பிப். 6) வரை நடைபெறுகின்றன. இதில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட பாரா விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். தஞ்சாவூா் மாவட்ட தடகள சங்கத் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் உள்ளிட்டோா் பரிசுகளை வழங்கினா்.

தொடர்புடைய செய்தி