தஞ்சாவூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்

தஞ்சாவூர் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நவ.23 மாலை, தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்தும், கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்தும் நெடார் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இரு பேருந்துகளிலும் இருந்த 70க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். அய்யம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி