திருக்காட்டுப்பள்ளி நகர் பிரிவுக்குள்பட்ட திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை அருகே உள்ள பழைமையான மரத்தை அகற்றும் பணி இன்று (மார்ச் 22) சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனால், திருக்காட்டுப்பள்ளி பேருந்துநிலையம், பூதலூர் சாலை, சன்னதி தெரு, மேலவீதி, தெற்குவீதி, காந்திசிலை தெரு மற்றும் மாதா கோவில் தெரு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்குதலும் பராமரித்தலும் திருவையாறு உதவி செயற்பொறியாளர் கே. ராஜா தெரிவித்துள்ளார்