தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலக்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோக அங்காடி கட்டிடத்தை தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ மற்றும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம், ஒன்றிய கழக செயலாளர்கள் அருளானந்தசாமி, உலகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.