சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் 4-வது நாளாகப் போராட்டம்

தஞ்சாவூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களாக மறியல் செய்த ஊழியர்கள், 4-வது நாளான வெள்ளிக்கிழமை (பிப். 5) பனகல் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு 50% முன்னுரிமை அளிக்க வேண்டும், சுமார் 60,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், மகப்பேறு, மாதவிடாய் மற்றும் தற்செயல் விடுப்புகளை முறையாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி