விழாவில் விளையாட்டுப் போட்டியில் வென்றவர்கள் மற்றும் வகுப்பு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் விடுமுறை எடுக்காத மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். விழாவில் சிறப்புரையாற்றிய துணைத் தலைவர் தங்கவேல் பேசிய போது, "இப்பள்ளியில் படித்து பல அதிகாரிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் வளர்ந்துள்ளனர். அவர்களை போல அனைவரும் நன்றாக படித்து முன்னேற வேண்டும். அதற்கு முன்னாள் மாணவராகிய நாங்கள் ஒத்துழைப்போம்" என உறுதி அளித்தார். நிறைவாக ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்