திருக்காட்டு பள்ளியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

பாபநாசம் உமையாள்புரத்தைச் சேர்ந்த நாகராஜ் (26) என்பவர், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு பேராலயத்திற்கு சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி