பூதலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சூர்யா, ராயந்தூர் வெண்ணாற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகள் ஏற்றிவந்தவர் போலீசை கண்டதும் வாகனத்தை விட்டுவிட்டு ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி ஏற்றிவரப்பட்ட 3 மணல் மூட்டைகளுடன் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை தேடிவருகிறார்கள்.