ஒரத்தநாடு: நீரில் மூழ்கி மெக்கானிக் பலி

ஒரத்தநாடு அருகே காசா மேடு புதுரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி முகேஷ் (29) வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பாத நிலையில், திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி ஆற்றில் அவரது பைக், கைப்பை, செல்போன் கண்டெடுக்கப்பட்டன. நேற்று அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. முகேஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாரா என தெரியவில்லை. இது குறித்து அவரது தந்தை அசோகன் அளித்த புகாரின் பேரில் தோகூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி