தஞ்சாவூர்: தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தஞ்சாவூர்- விளார் சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைக்காரரை தாலுகா போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர்- விளார் சாலை பகுதி கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதி கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது விளார் சாலை கீழத்தெருவில் மளிகை கடை வைத்துள்ள குருசாமி (38) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி