கும்பகோணம்: தவெக வேட்பாளர் வினோத் வெற்றிக்கனியை எட்டினார்

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வினோத், திமுக வேட்பாளர் சாக்கோட்டை க. அன்பழகனை 679 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். மொத்தம் 23 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், வினோத் 78,650 வாக்குகளும், திமுகவின் அன்பழகன் 77,971 வாக்குகளும் பெற்றனர். தமாகா வேட்பாளர் அசோக்குமார் மற்றும் நாதக வேட்பாளர் ஆனந்த் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி