தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. கல்லூரி முதல்வர் எம். பூவதி கூறுகையில், 2022-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி முதல் சிகிச்சை தொடங்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 7-ஆம் தேதி 50-ஆவது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதில் 7 பேருக்கு உயிருள்ள உறவினர்களிடமிருந்தும், 43 பேருக்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்தும் சிறுநீரகம் பெறப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்தும் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இந்தச் சாதனைக்குக் காரணமான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை முதல்வர் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி