தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமதாஸ் மற்றும் காவலர்கள் கார்த்தி, கார்த்திகேயன் ஆகியோரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷ் மற்றும் 6 பெண்கள் உள்பட மொத்தம் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.