கணிதம், தொழில்நுட்பம், ஏ. ஐ. குறித்த சர்வதேச மாநாடு

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கணிதம், தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) குறித்த 3 நாட்கள் சர்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. மும்பையின் அடிப்படை அறிவியல் சிறப்பு மைய பேராசிரியர் எம்.எஸ். ரகுநாதன் மாநாட்டை தொடங்கி வைத்தார். கலை, அறிவியல், மானுடவியல் மற்றும் கல்வியியல் பள்ளியின் புல முதன்மையர் கே. உமா மகேஸ்வரி வரவேற்றார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி. ஹரிஹரன் பாராட்டுரை வழங்கினார். பேராசிரியர் எம்.எஸ். ரகுநாதன் கணிதம் மற்றும் தரவு அறிவியல் புத்தகத்தை வெளியிட்டார். சென்னை கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் சீதாப்ரா சின்ஹா, மும்பை TIFR கணித பேராசிரியர் அனிஷ் கோஷ், மும்பை ஐஐடியின் கணிதத் துறை பேராசிரியர் யு.கே. ஆனந்தவர்தனன், மும்பை TIFR பேராசிரியர் ஏக்நாத்காதே, விஞ்ஞானி 'ஜி', விசாகப்பட்டினம் NSTL-DRDO ஆய்வக இணை இயக்குநர் டாக்டர் எச்.என். தாஸ், ஜார்ஜியாவின் எமோரி பல்கலைக்கழக பேராசிரியர் பரிமளா ராமன் ஆகியோர் மாநாட்டில் உரையாற்றினர்.

தொடர்புடைய செய்தி