வெங்கடசமுத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் அறிவாலயம் திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சியில், திருவையாறு தெற்கு ஒன்றிய திமுக செயலர் கௌதமன் தனது சொந்தப் பணத்தில் ரூ. 15 லட்சத்தில் கட்டிய உதயநிதி ஸ்டாலின் அறிவாலயத்தை, திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் மற்றும் தஞ்சை எம்பி ச. முரசொலி ஆகியோர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர். இந்த விழாவில் திருப்பூந்துருத்தி பேரூராட்சித் துணைத் தலைவர் அகமதுமைதீன், பூதலூர் வடக்கு ஒன்றிய திமுக செயலர் கல்லணை செல்லக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி