தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் அருகே மேல்செம்மங்குடி பகுதியில் உள்ள அணுகுசாலையின் பக்கவாட்டுச்சுவர் சமீபத்தில் பெய்த தொடர் மழையினால் சரிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து தஞ்சை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். அணுகுசாலையின் சரிந்து விழுந்த பக்கவாட்டுச்சுவரை ஜேசிபி எந்திரம் மூலமும், இயந்திர சிமெண்ட் கலவை மூலமும் உடனடியாக நெடுஞ்சாலைத்துறைப் பணியாளர்களைக் கொண்டு போர்க்கால அடிப்படையில் தரமான முறையில் செப்பனிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். உடனடி நடவடிக்கை எடுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.