தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒருவரின் 15 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவ மாணவர் கோபிநாத் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஜனவரி 15-ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கோபிநாத் கைது செய்யப்பட்டார். மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அவர் புதன்கிழமை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.