தஞ்சை: இரு சிறுவர்கள் உள்பட 4 பேர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே, கடந்த புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவியை, 4 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து வழிமறித்தது. அவர்களில் 17 வயது சிறுவன் ஒருவன், மாணவியைக் காதலிக்கும்படி மிரட்டி, கையைப் பிடித்து இழுத்து காரில் ஏற்ற முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் திரண்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின்பேரில், 17 வயது சிறுவர்கள் இருவர் உட்பட பிரகதீஸ்ராஜ் (31), மதன் (20) ஆகிய 4 பேரையும்  போலீஸார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி