சென்னையிலிருந்து காணொலி மூலம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். இதைத் தொடர்ந்து, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், அருங்காட்சியகம் கட்டப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு மரக்கன்று நட்டார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி. கே. ஜி. நீலமேகம், மேயர் சண். இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.