பாபநாசம்: விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

வடிகால் வாய்க்காலை தூர்வாரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை வடிகால் வாய்க்காலை தூர்வாரக் கோரியும், இதிலிருந்து பிரியும் வண்ணையகரம்பை வடிகால் வாய்க்காலையும் தூர்வாரக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக இன்று (ஜூன் 12) சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடனடியாக வாய்க்காலை தூர்வாருவதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்கப்பட்டது. 

இந்த பேச்சுவார்த்தையில் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் எம். வெங்கடேசன், எஸ். புருசோத்தமன், குரு. சிவா, கே. ராஜாராமன், கே. முத்துக்குமரன், என். வெங்கடேசன், டி. குமார் உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி