தஞ்சாவூர் ஓவியத்தில் சிறப்பிடம்: தஞ்சை பெண்ணுக்கு விருது

மாமல்லபுரத்தில் நவ. 17-ம் தேதி நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் 2023-24 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கான பூம்புகார் விருதுகள் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை போன்ற பாரம்பரிய கலைப் பொருட்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கிய தஞ்சாவூரைச் சேர்ந்த கு. கீர்த்திகா உள்ளிட்ட 10 பேருக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் இந்த விருதுகளை வழங்கினார். தஞ்சாவூர் ஓவியத்தில் சிறந்து விளங்கிய கீர்த்திகாவுக்கு விருதுடன் வெள்ளி நாணயம் மற்றும் ரூ. 10,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி