தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி ஒன்றிய ரயில்வே அமைச்சகத்திடம் வைத்த பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றான, தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு ஒரு பகல் நேர கூடுதல் ரயில் வேண்டுமென்ற அடிப்படையில், வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி முதல் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு பகல் நேரத்தில் ஒரு ரயில் இயக்கப்பட உள்ளது.