காவிரி ஆற்றில் நடுத்திட்டில் கன்று ஈன்று தவித்த பசுமாடு

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வளர்த்து வந்த பசுமாடு, நேற்று மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பவில்லை. இன்று காலை காவிரி ஆற்றின் நடுத்திட்டில் மாடு கன்று ஈன்று கரைக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததை ரமேஷ் கண்டார். உடனடியாக திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் நீந்திச் சென்று கன்றுக்குட்டியை பத்திரமாக மீட்டனர். மாடு தானாக கரைக்கு வந்துவிட்ட நிலையில், கன்றுக்குட்டி இருந்ததால் அங்கேயே தவித்துக் கொண்டிருந்தது. தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி