திருவையாறு அய்யனார் கோவில் தெரு சந்துரு மனைவி சுந்தராம்பாள் (70). தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் கழுத்தில் பவுனை அணிந்து கொண்டு வெளியில் செல்லக்கூடாது, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறி செயினை கழற்றி மடித்து வைத்துக் கொள்ள சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்த வந்துள்ளோம் என்று கூறியுள்ளனர். இதை அடுத்து சுந்தராம்பாள் செய்தித்தாளில் செயினை கழற்றி மடிக்க முயன்ற போது நாங்களே மடித்து தருகிறோம் என்று வாங்கி செய்தித்தாளில் மடித்து கொடுப்பது போல் வேறு ஒரு செய்தித்தாள் பொட்டலத்தை கொடுத்து விட்டு பைக்கில் இருவரும் சென்று விட்டனர்.
வீட்டில் உள்ளே செல்லும் பொழுது செய்தித்தாளை பிரித்துப் பார்த்தால் அதில் கற்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து திருவையாறு போலீஸில் சுந்தராம்பாள் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து செயினை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.