தஞ்சாவூர்: கடையக்குடிக்கு பேருந்து போக்குவரத்து தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கடையக்குடி கிராமத்திற்கு பேருந்து சென்று வரும் வகையில் புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. திருவெறும்பூரில் இருந்து 87டி என்ற பேருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து செல்கிறது. 

அந்த பேருந்து திருவெறும்பூரில் தினமும் காலை 7.20 மணிக்கும், மாலை 6.10 மணிக்கும் இருந்து வரும்போது கூடுதலாக கடையக்குடி மற்றும் புத்தாம்பூர் ஆகிய கிராமங்களுக்கு சென்று பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் வருவதற்காக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து ஆட்சியதிகாரி பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் எம்பி முரசொலி, திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன், ஒன்றிய குழு தலைவர் கல்லணை செல்லக்கண்ணு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க தினமும் திருவெறும்பூரில் இருந்து காலை மற்றும் மாலை இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி